இந்தியா 76வது இடம்: கூடைப்பந்து தரவரிசையில்

புதுடில்லி: கூடைப்பந்து தரவரிசையில் இந்திய அணி 76வது இடத்துக்கு முன்னேறியது.
கூடைப்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கூடைப்பந்து கூட்டமைப்பு (எப்.ஐ.பி.ஏ.,) வெளியிட்டது. ஆண்கள் பிரிவில் இந்திய அணி, 127.3 புள்ளிகளுடன் 81வது இடத்தில் இருந்து 76வது இடத்தை கைப்பற்றியது. கடந்த மாதம் ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் பஹ்ரைனை வென்ற இந்தியா, 11வது முறையாக ஆசிய கோப்பை பிரதான சுற்றுக்கு முன்னேறியது.
முதல் மூன்று இடங்களில் அமெரிக்கா (840.1 புள்ளி), செர்பியா (761.4), ஜெர்மனி (757.3) அணிகள் நீடிக்கின்றன.
தவிர, ஆசிய அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி, இந்தோனேஷியாவை பின்தள்ளி 15வது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா (733.1) உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண்ணை போட்டோ எடுத்தவரின் சிங்கப்பூர் விமான பயணம் ரத்து
-
மொபைல்போன் ஏற்றுமதி 54 சதவிகித உயர்வு
-
தனியார் நகை கடன் நிறுவனத்தில் ரூ.1.5 லட்சம் மோசடி செய்தவர் கைது
-
சைபர் குற்றப்பிரிவு புதிய கட்டடம் அறிவுப்பு நிலையிலேயே உள்ளதா?
-
இருளில் மூழ்கும் தேசிய நெடுஞ்சாலை எட்டு ஆண்டாக 'துாங்கும்' அதிகாரிகள்
-
பிரதான ரோடுகளில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
Advertisement
Advertisement