ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் நீட்டிப்பு

ராமநாதபுரம் - தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுகிறது.

 ↓செகந்திராபாத்தில் இருந்து புதன்கிழமைகளில் இரவு, 9:10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு, 11:45 மணிக்கு ராமநாதபுரம் செல்லும் சிறப்பு ரயில், இன்று முதல் வரும் 30ம் தேதி வரை நீட்டிப்படும்

 ↓ராமநாதபுரத்தில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் காலை, 9:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பகல், 12:50 மணிக்கு செகந்திராபாத் செல்லும் ரயில், வரும் 4 முதல் மே 2ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement