சந்தன மரம் வெட்ட சென்றவரை எரித்து கொன்றது யார்?

அந்தியூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, சின்னக்குத்தியை சேர்ந்தவர்கள் சக்திவேல், 25, வெங்கடேஷ், ராஜேந்திரன், குமார் ஆகியோர், ஐந்து நாட்களுக்கு முன், ஈரோடு மாவட்டம், பர்கூர்மலையில் உள்ள தட்டக்கரை வனச்சரகம் போதமலை எம்மம்பட்டி பகுதிக்கு, சந்தன மரம் வெட்ட வந்துள்ளனர்.

மரம் வெட்டிய போது துப்பாக்கி சத்தம் கேட்டு, ஆளுக்கொரு திசையில் ஓடினர். இதில், சக்திவேல் வீடு திரும்பவில்லை. சில நாட்களுக்கு முன் சக்திவேலை தேடி பர்கூர் சென்று வெங்கடேஷ், ராஜேந்திரன் விசாரித்தனர்.

இந்நிலையில், எம்மம்பட்டி பள்ளம் பகுதியில், பாதி எரிந்த நிலையில், தலை, எலும்புத்துண்டு கிடந்தது. அந்தியூர் போலீசார், வனத்துறையினர் அங்கு சென்றனர். வெங்கடேஷ், ராஜேந்திரன் இறந்து கிடந்தது காணாமல் போன சக்திவேல் என, உறுதி செய்தனர்.

சந்தன மரம் வெட்டிய போது, மற்றொரு கும்பலிடம் சிக்கிக் கொண்டதில் கொல்லப்பட்டாரா அல்லது இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொன்று எரிக்கப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement