வாய், பல் நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாகூர்: பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், சோரியாங்குப்பம் கிராமத்தில் வாய் மற்றும் பல் நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர் தேவி பங்கேற்று, ' வாய் மற்றும் பல் நோய்' குறித்தும், நோய் வராமல் தடுப்பது, சிகிச்சை முறைகள் குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும், பல் நோய் தொடர்பாக பொது மக்கள் சந்தேங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், கிராம மக்கள், மகளிர் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, சுய உதவி குழு நிர்வாகிகள் நித்யா, கிரிஜா, காஞ்சனா, விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement