வின்பாஸ்ட் கார் கம்பெனியில் வேலை என பரவிய வதந்தி

ஓட்டப்பிடாரம்:துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, சில்லாநத்தம் பகுதியில் வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் மின் வாகன தொழிற்சாலை, 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. ஜூலை மாதம் உற்பத்தியை துவக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கார் தொழிற்சாலையில் பட்டதாரிகளுக்கான மேற்பார்வையாளர் பணி, நிர்வாக பணிகளுக்கு சில நாட்களுக்கு முன் நேர்முகத்தேர்வு நடந்தது.

இந்நிலையில், டிப்ளமோ, ஐ.டி.ஐ., படித்த இளைஞர்களுக்கான நேர்முக தேர்வு நடப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதை நம்பி, துாத்துக்குடி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று ஆலை முன் திரண்டனர்.

அவர்களிடம், 'தற்போது தேர்வு நடக்கவில்லை. வலைதளங்களில் தவறான தகவல் பரபரப்பட்டுள்ளது' என, கம்பெனி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், அங்கு திரண்டவர்கள் ஏமாற்றமடைந்தனர். ஒரே நேரத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஆலை முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிறுவன அதிகாரிகள்,அவர்களிடம் பயோடேட்டாவை வாங்கிக் கொண்டு அனுப்பினர்.

Advertisement