பா.ஜ., சார்பில் கையெழுத்து இயக்கம்
போத்தனூர்; சுந்தராபுரம் மண்டல் பா.ஜ., சார்பில், தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தி, அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வலியுறுத்தி, மக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி, சுந்தராபுரம் அடுத்து முருகா நகர் பஸ் ஸ்டாப்பில், மண்டல் தலைவர் முகுந்தன் தலைமையில் நடந்தது.
மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதன் மூலம் தமிழ், ஆங்கிலம் தவிர்த்து பிற மொழி பேசுவோர் பெறும் பயன் குறித்து, அப்பகுதியினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனை., கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து முருகா நகர், முதலியார் வீதி வழியே சாரதா மில் சாலை வரை, மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
சாரதா மில் சாலையில் அரசன் தியேட்டர் முன், குறிச்சி மண்டல் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. குறிச்சி மண்டல் முன்னாள் தலைவர் மதிவாணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவில் நிலங்களுக்கு பட்டா 'நோ'
-
17 மாவட்டங்களில் 50 புதிய குறு வட்டங்கள் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு
-
கச்சபேஸ்வரர் தெப்போத்சவம் தாயார் குளத்தில் இன்று துவக்கம்
-
துாத்துக்குடி அனல் மின் நிலைய தீவிபத்து சேதம் குறித்து ஆய்வு செய்கிறது குழு அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
-
சட்டசபையில் இன்று
-
கூடுதல் மின்சாரம் கையாள டிரான்ஸ்பார்மர் திறன் உயர்வு
Advertisement
Advertisement