திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜை ஏப். 7ல் துவக்கம்

திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் ஏப்.11ல் நடைபெற உள்ள கும்பாபிசேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏப்.7ல் யாகசாலை பூஜை துவங்குகின்றன.
இக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற உள்ள நான்காவது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் பூமாயி அம்மன் உள்ளிட்ட சப்தமாதர் சன்னதியும், பைரவர். ஆதிவிநாயகர், முருகன், ஆஞ்சநேயர், நவக்கிரகம் ஆகிய உபசன்னதிகள், 3 நிலை ராஜகோபுரம்,மூலவர் விமானம், கோயில் முன் மண்டப துாண்கள் பராமரிப்பு, சுதை வேலைப்பாடுகள், வண்ணப்பூச்சு ஆகிய திருப்பணிகள் நிறைவடைந்து, தற்போது யாகசாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மூலவர் அம்பாளுக்கு 33 குண்டங்களுடன் உத்தமபட்ச யாகசாலையும், 6 குண்டங்களுடன் பரிவார தெய்வங்களுக்கான யாகசாலையும் அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலைக்கு தற்போது வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. யாகசாலை பூஜை ஏப்.7 மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை,தன பூஜைகளுடன் துவங்குகின்றன.
ஏப்.8 மாலையில் முதற்கால யாக பூஜை, மார்ச் 9 காலை,மாலை 2,3 ம் காலயாக பூஜைகள்,ஏப்.10ல் காலை,மாலையில் 4,5ம் காலயாக பூஜைகள் நடைபெறுகின்றன. ஏப்.11 அதிகாலை 5:00 மணிக்கு ஆறாம் கால யாகபூஜையும்,காலை 8:30 மணிக்கு விமான,கோபுர மகா கும்பாபிஷேகமும், காலை 8:50 மணிக்கு மூலவர் மகா கும்பாபிஷேகமும்,மாலை 5:00 மணிக்கு மகா அபிஷேகமும், இரவில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெறும். யாகசாலை பூஜைகளில் பிள்ளையார்பட்டி கே.பிச்சைக்குருக்கள் தலைமையில் 70க்கும் மேற்பட்ட சிவாச்சார்யார்கள் பஙகேற்க உள்ளனர். ஏற்பாட்டினை முன்னாள் தக்கார் நா.ஆறு.தங்கவேலு, அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர்,தக்கார் து.பிச்சுமணி,செயல் அலுவலர் எஸ்.விநாயகம் ஆகியோர் செய்கின்றனர்.
மேலும்
-
கோவில் நிலங்களுக்கு பட்டா 'நோ'
-
17 மாவட்டங்களில் 50 புதிய குறு வட்டங்கள் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு
-
கச்சபேஸ்வரர் தெப்போத்சவம் தாயார் குளத்தில் இன்று துவக்கம்
-
துாத்துக்குடி அனல் மின் நிலைய தீவிபத்து சேதம் குறித்து ஆய்வு செய்கிறது குழு அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
-
சட்டசபையில் இன்று
-
கூடுதல் மின்சாரம் கையாள டிரான்ஸ்பார்மர் திறன் உயர்வு