பனாமா கால்வாய்: டிரம்ப் முயற்சிக்கு நங்கூரமிட்ட சீனா

புதுடில்லி: அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான அடுத்த மோதல் களமாக அமைந்துள்ளது, பனாமா கால்வாய். அமெரிக்க அதிபராக தேர்வானதும் டிரம்ப் மேற்கொண்ட அறிவிப்புகளில் முக்கியமான ஒன்று, பனாமா கால்வாயை மீட்டெடுப்பது. இது, அமெரிக்காவின் பொருளாதார பாதுகாப்புக்கு மிகவும் அவசியமானது என, டிரம்ப் அப்போது கூறியிருந்தார்.
இதையடுத்து, கடந்த ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவியேற்றதும், இதற்கான பணிகளை தீவிரப்படுத்தினார். தனக்கு நெருக்கமான, 'பிளாக்ராக்' எனும் அமெரிக்க முதலீட்டு நிறுவனத்திடம் இதற்கான பணிகளை ஒப்படைத்தார்.
இந்நிறுவனம், பனாமா கால்வாயின் முக்கிய அங்கமாக விளங்கும் அதன் இரண்டு முனைகளிலும் உள்ள துறைமுகங்களை கையகப்படுத்த முடிவு செய்தது. ஹாங்காங்கைச் சேர்ந்த சி.கே.ஹட்சிசன் குழுமம் தான் இந்த துறைமுகங்களை நடத்தி வருகிறது.
பனாமா கால்வாயில் உள்ள இரண்டு துறைமுகங்களோடு சேர்த்து, உலகம் முழுதும் தன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 43 துறைமுகங்களை, கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி ரூபாய்க்கு, பிளாக்ராக் நிறுவனத்துக்கு விற்க, ஹட்சிசன் குழுமம் முடிவு செய்தது.
ஏப்ரல் 2ம் தேதிக்கு முன்னதாக இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சீன அரசின் முட்டுக்கட்டையால் தற்போது இந்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சில நாட்களே இருந்த நிலையில், சீன சட்டங்களை மீறியிருக்க வாய்ப்பிருப்பதாக கூறி, ஹட்சிசன் குழுமத்தின் மீது விசாரணை துவங்கப்பட்டுள்ளது.
இத்தனைக்கும் ஹட்சிசன் குழுமம், சீன நிறுவனம் கூட கிடையாது. ஹாங்காங்கைச் சேர்ந்தது. ஹாங்காங்கின் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த 96 வயதான லி கா - ஷிங் என்பவரே இதற்கு சொந்தக்காரர்.
சீன அரசுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காத காரணத்தால், ஹட்சிசன் குழுமத்தின் மீது சீன அதிபர் ஷீ ஜின்பிங் கோபம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹட்சிசன் நிறுவனத்துக்கு சீனாவில் பல வணிகங்களும், சொத்துக்களும் உள்ள நிலையில் ஹட்சிசன் நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என, சீன நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நேற்று ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்க வேண்டிய நிலையில், சீன அரசு ஹட்சிசன் குழுமத்தின் மீது விசாரணையை துவங்கியுள்ளதன் வாயிலாக, டிரம்பின் முயற்சியை சீனா வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளது.
பனாமா கால்வாய் விவகாரத்தால், சீனாவும் அமெரிக்காவும் மோதிக்கொள்ளும் நிலையில், உலக நாடுகள், புதிதாக ஒரு புவிசார் அரசியல் பிரச்னையை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பால்போவா (பசிபிக் பகுதி) கிறிஸ்டோபால் (அட்லாண்டிக் பகுதி)
அட்லான்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையேயான பயண தூரத்தை கணிசமாக குறைக்கிறது. இது இல்லாவிட்டால், அட்லான்டிக் கடல் பகுதியிலிருந்து பசிபிக்கிற்கு செல்ல, தென் அமெரிக்காவின் தெற்கு முனையைச் சுற்றி வர வேண்டும். அமெரிக்காவின் 40 சதவீத கன்டெய்னர் கப்பல்கள் இதன் வாயிலாகவே பயணிக்கின்றன
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் அமைந்துள்ளது 1904 - 1914ல் அமெரிக்கா கட்டியது 1990கள் வரை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது அமெரிக்க தலையீட்டை பனாமா அரசு விரும்பவில்லை 1999ல் முழு கட்டுப்பாட்டையும் அமெரிக்கா விலக்கியது. தற்போது பனாமா கால்வாய் ஆணையம் நிர்வகிக்கிறது இருப்பினும், சீனாவின் ஆதிக்கத்தில் இருப்பதாக புகார் அமெரிக்காவின் 40% சரக்கு கப்பல்கள் பயணிக்கின்றன
முதலீட்டு ஆலோசனை நிறுவனம் 42 நாடுகளில் இயங்கி வருகிறது 19,000க்கும் அதிகமான பணியாளர்கள்
50க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகிறது 24 நாடுகளில், 53 துறைமுகங்களை இயக்குகிறது 3 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள்

மேலும்
-
'சொத்து வரி குறைப்பு உரிய நேரத்தில் அறிவிப்பு'
-
'தங்கையை கொன்றவர் மீது குண்டாஸ் பாய வேண்டும்'
-
மத்திய, மாநில வரி திரும்ப பெறும் திட்டம் நீட்டிப்பது அவசியம்: ஏற்றுமதியாளர்கள்
-
'கூட்டுறவு சங்கங்களின் இருப்பு கணக்கு; நிர்வாக அலுவலர்களே சான்றளிக்கலாம்'
-
சத்துணவு அரிசி விற்பனை பள்ளிகளில் அதிரடி ஆய்வு
-
பெருமாநல்லுார் குண்டம் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்