நெய்வேலியில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்

நெய்வேலி; நெய்வேலி வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

கோவிலில் நேற்று காலை 10:00 மணியளவில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, வரும் 6ம் தேதி தெருவடைச்சான் திருவிழா, 9ம் தேதி திருக்கல்யாணம், 10ம் தேதி தேரோட்டம் நடந்தது. 11ம் தேதி, பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. 12ம் தேதி தெப்பல் திருவிழா, 13 ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

ஏற்பாடுகளை என்.எல்.சி., நிறுவனம், விழா குழுவினர் மற்றும் நெய்வேலியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.

Advertisement