சிறுவனுக்கு கால் முறிவு

தேனி : வீரபாண்டி அருகே ஜங்கால்பட்டி ஈஸ்வரன் மகன் அஜய்பிரசாத் 15. இவர் வீட்டிற்கு அருகே நண்பர்களுடன் புறா பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள தோட்ட கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் முழ்கி தத்தளித்தார். தகவல் அறிந்த வீரபாண்டி சிறப்பு எஸ்.ஐ., திருப்பதி தலைமையிலான போலீசார், சின்னமனுார் தீயணைப்பு வீரர் கணேசன் தலைமையில் ராபர்ட் உள்ளிட்ட வீரர்கள் சிறுவனை மீட்டனர்.இதில் சிறுவனுக்கு வலது கணுக்கால் முறிந்தது. அவர் தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டர்.

Advertisement