சி.இ.ஓ., அலுவலகத்தில் ஹிந்து முன்னணி மனு

தேனி,: தேனி சி.இ.ஓ., அலுவலகத்தில் ஹிந்து முன்னணியின் இளைஞர் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர். மனுவில், 'தேனியில் இயங்கும் ஒரு கிறிஸ்துவ பள்ளியில் படிக்கும் மாணவிகள் பள்ளியில் நுழையும் போது நெற்றியில் வைத்து வரும் பொட்டினை பள்ளி நிர்வாகத்தினர் அழிக்கின்றனர். கைகளில் கங்கனம் கட்டி வரக்கூடாது என்கின்றனர்.

அந்த கல்வி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கோரி இருந்தனர். ஹிந்து முன்னணி நகர நிர்வாகி மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். புகார் பற்றி சி.இ.ஓ., இந்திராணி கூறுகையில், 'மனு அளித்துள்ளனர், இதுபற்றி ஆய்வு செய்யப்படும்', என்றார்.

Advertisement