மின்நுகர்வோர் சிறப்பு முகாம்

கடலுார்; கடலுார் மின்துறை மேற்பார்வை பொறியாளர் சதாசிவம் விடுத்துள்ள செய்திகுறிப்பு:

கடலுார், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய அனைத்து கோட்ட அலுவலகங்களிலும் ஏப்ரல் 5ம் தேதி காலை 11:00மணி முதல் மாலை 5:00 மணி வரை கடலுார் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்களின் மின் கட்டணம் தொடர்பான குறைகள், பழுதான மின் மீட்டர் மாற்றுவது குறித்து மனுக்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்படுகிறது.

Advertisement