பா.ஜ., ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதி பா.ஜ.,வில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், அண்ணா நகர் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.

மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அருள், செந்தில்குமார், ரவி முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் சக்திவேல் வரவேற்றார். வேலுார் பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய தலைவர்கள், நிர்வாகிகளை அறிமுகம் செய்து பேசினார்.

கூட்டத்தில், அனைவரும் ஒற்றுமையாக உழைத்து கட்சியை பலப்படுத்தும் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி பணியாற்ற வேண்டும். கிளை கமிட்டி நிர்வாகிகளை நியமித்து ஒன்றியங்களை வலிமையாக்க வேண்டும். பூத் நிலை முகவர்களை நியமிக்க வேண்டும். கட்சியின் ஸ்தாபன நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார். நிர்வாகிகள் ராஜேஷ், முருகன், விஜயகுமார், மாரிமுத்து, ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement