கிராமங்களில் குற்றங்கள் தடுக்க 'வில்லேஜ் விஜிலென்ஸ் கமிட்டி'

சென்னை:தமிழகத்தில், தற்போது கிராமங்களிலும் செயின் பறிப்புகள் நடக்கின்றன; போதைப்பொருட்கள் புழக்கமும் அதிகரிக்கத்து உள்ளது.
சில மாதங்களுக்கு முன், தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் அருகே இரவு நேரத்தில், பஸ்சுக்கு காத்திருந்த பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இத்தகைய குற்றங்களை கட்டுப்படுத்த, மாநிலம் முழுதும், 12,500க்கும் மேற்பட்ட, 'வில்லேஜ் விஜிலென்ஸ் கமிட்டி' என்ற கண்காணிப்புக் குழுக்களை, போலீசார் அமைத்து உள்ளனர்.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கிராமங்களில் வசிக்கும் படித்த இளைஞர்கள், பெண்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள், ஊராட்சி நிர்வாகிகள் என, 25 பேரை இணைத்து, மாநிலம் முழுதும், 12,500க்கும் மேற்பட்ட, 'வில்லேஜ் விஜிலென்ஸ் கமிட்டி'கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இவர்கள் உள்ளூர் போலீசாருடன் இணைந்து, குற்றங்கள் நடக்காமல் தடுக்க உதவி செய்வர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


மேலும்
-
25 ஆயிரம் மேற்குவங்க ஆசிரியர்கள் பணிநீக்கம்; உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
-
தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்கும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.,
-
மேடையில் தவறி விழுந்தார் ஆஸி., பிரதமர் ஆன்டனி அல்பனீஸ்
-
பாதுகாப்பு படையினர் தொடர் அதிரடி; பலம் இழந்த மாவோயிஸ்டுகள் கதறல்!
-
டிரம்ப் வர்த்தகப் போர் எதிரொலி: உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி
-
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் ரத்தாகுமா: தமிழக அரசின் மனுவை நாளை விசாரிக்கிறது ஐகோர்ட்