சலுகை கட்டணம் ரீசார்ஜ் செய்ய முடியாமல் தவிப்பு

திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்ட நிலையில் சலுகை கட்டணம் மூலம் கடந்து வந்த வாகன ஓட்டிகள் நேற்று ரீசார்ஜ் செய்ய முடியாமல் தவிப்பிற்குள்ளாகினர்.

மதுரை- பரமக்குடி நான்கு வழிச்சாலையில் திருப்பாச்சேத்தி, போகலூர் உள்ளிட்ட இடங்களில் டோல்கேட் அமைக்கப்பட்டு நான்கு வழிச்சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டோல்கேட்டை சுற்றி 10 கி.மீ., சுற்றளவிற்கு உள்ள வாகனங்களுக்கு கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது. திருப்பாச்சேத்தியைச் சுற்றிலும் வாழை விவசாயம் செய்யப்படுகிறது. தினசரி வாழை இலை, காய், மரம், பழம் உள்ளிட்டவைகள் மதுரை மார்க்கெட்டிற்கு பத்திற்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

இது போன்ற கார்,வேன் உள்ளிட்டவற்றிற்கு சராசரியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட பாஸ் வழங்கப்படுகிறது. மாதத்திற்கு குறிப்பிட்ட தொகை செலுத்தி 50 முறை டோல்கேட்டை கடக்கலாம், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலாகிய நிலையில் சலுகை கட்டணம் பெறுபவர்கள் ரீசார்ஜ் செய்ய முடியவில்லை.

வங்கி விடுமுறை என்பதாலும் சாப்ட்வேர் அப்டேட் செய்யாததாலும் ரீசார்ஜ் செய்ய முடியவில்லை. நீண்ட போராட்டத்திற்கு பின் மதியம் 2:00 மணிக்கு மேல் ரீசார்ஜ் செய்ய முடிந்தது. இதனால் 300க்கும் மேற்பட்ட சலுகை கட்டணம் பெற்றவர்கள் மதியம் வரை டோல்கேட்டை கடக்க முடியவில்லை.

Advertisement