நான்கு வழிச்சாலையில் கருகும் செடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருப்புவனம்: மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள செடிகளுக்கு கடந்த இரு மாதங்களாக தண்ணீர் ஊற்றப்படாததால் செடிகள் கருகி வருகின்றன.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையும் அதன்பின் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வரை இரு வழிச்சாலையும் அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து நடந்து வருகிறது.
சாலையின் நடுவே சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு அதில் அரளிச் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
நான்கு வழிச்சாலை பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த இரு மாதங்களாக சென்டர் மீடியனில் உள்ள அரளிச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சாததால் கருகி வருகின்றன.
வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையை அரளிச்செடிகள் உட்கிரகித்து கொள்ளும் என்பதால் நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்டவற்றில் வளர்க்கப்படுகின்றன.
அரளிச் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சாததால் செடிகள் அனைத்தும் கருகி வருகின்றன.