மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு

காரைக்குடி : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும், மாவட்டங்களுக்கு இடையேயான, 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிக்கு சிவகங்கை மாவட்ட அணி தேர்வு ஏப். 4 ம் தேதி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி 'பி' மைதானத்தில் காலை 8:00 மணிக்கு நடைபெறுகிறது.

தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்கள் வயது 01.09.2006 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ இருத்தல் வேண்டும். வெள்ளை சீருடை, ஷூ அணிந்து வரவேண்டும்.

கிரிக்கெட் உபகரணங்கள் கொண்டுவர வேண்டும். தொடர்புக்கு சங்கர் 98656 15649.

Advertisement