தேனியில் தெருநாய் தொல்லை அதிகரிப்பு

தேனி : தேனி நகராட்சி சமதர்மபுரம், பாரஸ்ட்ரோடு, அல்லிகரம், ஸ்ரீராம் நகர், பொம்மையகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகள் வெளியில் வர அச்சமடைகின்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ரத்னாநகர், அன்னஞ்சி விலக்கு பகுதிகளிலும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.

இப்பகுதிகளில் டூவீலர்களில் செல்பவர்கள் தெருநாய்கள் விரட்டுவதால் விபத்துக்களில் சிக்குவது தொடர்கிறது.

மாவட்ட அளவில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement