56வது வார்டு இடைத்தேர்தலுக்கு 16 ஓட்டுச்சாவடி அமைக்க முடிவு

கோவை; கோவை மாநகராட்சியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள, 56வது வார்டில், மூன்று பள்ளிகளில், 16 ஓட்டுச்சாவடிகள் அமைய உள்ளன.

கோவை மாநகராட்சியில், 56வது வார்டு கவுன்சிலர் உயிரிழந்ததால், அப்பதவியிடம் காலியாக இருக்கிறது.

வரும் மே மாதம் இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

ஜன., 6ல் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில், வார்டு இடைத்தேர்தலுக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டிருக்கிறது.

அந்த வார்டில், 1,400 வாக்காளர்களுக்கு மிகாமல் ஓட்டுச்சாவடி அமைக்க அறிவுறுத்தப்ப்டடது. அவ்வகையில், மூன்று பள்ளிகளில், 16 ஓட்டுச்சாவடிகள் அமைய உள்ளன.

'வரும், 9ம் தேதிக்குள் வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்தி இருக்க வேண்டும்.

இவற்றை தேர்தல் நடத்தும் அலுவலர் கள ஆய்வு செய்திருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து, ஓட்டுச்சாவடி பட்டியலை வழங்கி, கருத்து கேட்டறிய வேண்டும். அதன்பின், ஓட்டுச்சாவடி பட்டியலை இறுதி செய்து வெளியிட வேண்டும்.

போட்டோவுடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை ஏப்., 24ல் பதிவிறக்கம் செய்ய வேண்டும்' என, மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்திஉள்ளது.

Advertisement