ஆசிய மவுன்டெயின் பைக் சாம்பியன்ஷிப்; இந்திய அணியில் இரு கோவை வீரர்கள்

கோவை; 'ஆசிய மவுன்டெயின் பைக் சாம்பியன்ஷிப்' போட்டியில் பங்கேற்கும், இந்திய அணியில் கோவை வீரர்கள் இருவர் இடம்பிடித்துள்ளனர்.
'ஆசிய மவுன்டெயின் பைக் சாம்பியன்ஷிப்-2025' போட்டி சீனாவில் வரும், 23 முதல், 27ம் தேதி வரை நடக்கிறது. இதில், பங்கேற்கும் இந்திய அணியில், கோவையை சேர்ந்த வீரர் ரமணி, வீராங்கனை சவுபர்ணிகா ஆகியோர்,தனித் திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும்,வரும், 10ம் தேதி சீனா புறப்படவுள்ளனர். அணியில் இடம்பெற்ற இரு வீரர்களையும், கோவை மாவட்ட சைக்கிளிங் சங்க தலைவர் மாணிக்கம், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பயிற்சியாளர் சபரிநாதன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement