சுய விபரம் பதிவுக்கு கால நீட்டிப்பு அறிவிப்பு
கோவை; ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் சுய விபரங்களை பதிவு செய்ய, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும், இகேஒய்சி எனும் பயனாளிகள் விபரங்களை, ரேஷன் கடைகளில் கட்டாயம் பதிவு செய்ய வேண் டும் எனவும், இந்த பணியை, மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த அவகாசம் முடிவடைந்து விட்ட நிலையில், இம்மாதம் 30 தேதி வரை பதிவு செய்ய, கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ராஜேந்திரன் கூறுகையில், ''கோவை மாவட்டத்தில், இதுவரை, 84 சதவீதம் கார்டுதாரர்கள் விபரங்களை பதிவு செய்துள்ளனர். 16 சதவீதம் பேர் விடுபட்டுள்ளனர்.
''பதிவு செய்யாதவர்கள் விரைவாக பதிவு செய்யவே, கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement