விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அவிநாசி : தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்ட தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைத்துள்ள மூன்று மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியத்தை, 700 ஆக உயர்த்தியும், 100 நாள் என்பதை, 200 நாளாக உயர்த்தவும் வழங்க கோரிக்கை விடுத்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவிநாசி ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

கோரிக்கைகளை விளக்கி இ.கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் ஷாஜகான், ஜெனரல் சங்கம் மாவட்ட பொருளாளர் செல்வராஜ், வக்கீல் சுப்பிரமணியம், ஒன்றிய செயலாளர் முத்துசாமி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சண்முகம் பேசினர்.

பாப்பாங்குளம், வேட்டுவபாளையம், ஆலத்துார், கானுார்புதுார், தெக்கலுார், வேலாயுதம்பாளையம், பழங்கரை, முதலிபாளையம் ஆகிய ஊராட்சிகளில் இருந்து, தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) ஆனந்தனிடம் மனு அளிக்கப்பட்டது.

Advertisement