டூ-வீலரில் அமர்ந்திருந்த சிறுவன் தீப்பற்றி பலி

புதுக்கோட்டை; பொன்னமராவதி அருகே சாலையில் சென்ற கொண்டிருந்த மொபட் திடீரென தீப்பற்றி எரிந்ததில் படுகாயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டியை சேர்ந்தவர் பூஞ்சோலை, 36, இவரது மகன் ராஜிவ், 9, மகள் ரஞ்சிதா, 17. இவர்கள், நேற்று முன்தினம் இரவு பொன்னமராவதியில் இருந்து, உலகம்பட்டிக்கு அவரது, டி.வி.எஸ்., சூப்பர் எக்ஸ்.எல்., மொபட்டில் சென்றார்.
அப்போது, கேசராபட்டி அருகே எதிர்பாராதவிதமாக மொபட்டின் முன் பக்கம், பெட்ரோல் டேங்க் பகுதியில் தீப்பற்றியது. இதில், மொபட்டில் முன் பகுதியில் அமர்ந்து சென்று சிறுவன் ராஜிவ் பலத்த காயமடைந்தார்.
மொபட்டை ஓட்டிச் சென்ற பூஞ்சோலை, இவரது பின்னால் அமர்ந்திருந்த ரஞ்சிதா லேசான காயம் அடைந்தனர். இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, உடன் வலையபட்டி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேல்சிகிச்சைக்காக, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜிவ், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். பொன்னமராவதி போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும்
-
எஸ்.சி., - எஸ்.டி.,யினர் தொழில் தொடங்க மானியம் ரூ.2.65 கோடி:மாவட்டத்தில் ஓராண்டில் 138 பேருக்கு கடனுதவி
-
தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி பாடப்புத்தகங்கள் தயாரிக்க அழைப்பு
-
தொழிற் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
-
விவசாயிகளுக்கான அடையாள எண் பெற ஏப்ரல் 8ம் தேதி கடைசி நாள் வேளாண் உதவி இயக்குனர் தகவல்
-
முன்விரோத தகராறு 14 பேர் மீது வழக்கு
-
விபத்தில் படுகாயமடைந்த அ.தி.மு.க., பிரமுகர் சாவு