சிறுமி பாலியல் பலாத்காரம்; இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

கோவை; கோவை அருகே சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை அருகேயுள்ள நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்,31; கூலித்தொழிலாளி. 13 வயது சிறுமியிடம் பழகி வந்துள்ளார். இந்நிலையில், அந்த சிறுமியை ஏமாற்றி கடத்திச்சென்று, கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார்.

புகாரின் பேரில், பேரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, சதீஷ்குமாரை 2021, ஜன., 5ல் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவர் மீது, கோவையிலுள்ள முதன்மை போக்சோ கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சுமத்தப்பட்ட சதீஷ்குமாருக்கு, 20 ஆண்டுகள் சிறை, 12,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது.

Advertisement