தமிழகத்தில் கொட்டியது மழை; அதிக மழைப்பொழிவு எங்கே!

சென்னை: சென்னை, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக அதிகமான மழை தென்காசி மாவட்டம் சிவகிரியில் 110 மி.மீ., பதிவாகியுள்ளது.
சென்னை, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
செஞ்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் திடீர் கனமழை பெய்தது. திடீர் கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கியது. சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
அதிக மழை எங்கே!
இன்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக அதிகமான மழை தென்காசி மாவட்டம் சிவகிரியில் 110 மி.மீ., பதிவாகியுள்ளது. மழை அளவு மி.மீட்டரில் பின்வருமாறு:
மதுரை மாவட்டம்
திருமங்கலம்- 84.6
மதுரை விமான நிலையம்- 63.5
சோழவந்தான்- 48
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம்- 38
கோவிலங்குளம் -57.4
சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை- 56
திருநெல்வேலி மாவட்டம்
கக்காச்சி- 34
ஊத்து- 45
நாலுமூக்கு- 40
சென்னை மடிப்பாக்கம்- 38
கரூர் (அரவக்குறிச்சி) - 34
கனமழை எச்சரிக்கை
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் நாளை மறுதினம் (சனிக்கிழமை) வரை 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
