எக்ஸ்.யூ.வி., 700 'டாப் மாடல்' விலை குறைப்பு

'மஹிந்திரா' நிறுவனத்தின் 'எக்ஸ்.யூ.வி., 700' எஸ்.யூ.வி., காரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, 'ஏ.எக்ஸ் - 7' மற்றும் 'ஏ.எக்ஸ்., - 7 எல்' ஆகிய இரு உயர்ந்த மாடல் கார்களுக்கு மட்டும், 45,000 முதல் 75,000 ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளன. ஆனால், புதிய 'இபோனி எடிஷன்' மாடல் காருக்கு விலை குறைக்கப்படவில்லை.

டீசல் 'எக்ஸ்., - 7' மாடலில், 6 மற்றும் 7 சீட்டர், ஆல் வீல் டிரைவ் அமைப்பு கொண்ட கார்களுக்கு 45,000 ரூபாயும், டீசல் 'ஏ.எக்ஸ்., - 7 எல்' மாடல் கார்களுக்கு 75,000 ரூபாயும் விலை குறைக்கப்பட்டுள்ளன.

பெட்ரோல் 'ஏ.எக்ஸ்., - 7' மாடலில், 6 மற்றும் 7 சீட்டர் கார்களுக்கு 45,000 ரூபாயும், 'ஏ.எக்ஸ்., - 7 எல்' மாடலில், 6 மற்றும் 7 சீட்டர், ஆட்டோ கியர்பாக்ஸ் கார்களுக்கு 75,000 ரூபாயும் விலை குறைக்கப்பட்டுள்ளன.

Advertisement