கார் விற்பனை 3.43 சதவீதம் உயர்வு இரண்டாம் இடத்துக்கு 'தொடரும் போட்டி'

நிதியாண்டு முடிவில், கார் விற்பனை ஆறுதலை தந்துள்ளது. அதாவது, கடந்த மார்ச் மாத கார் விற்பனை, 3.43 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 3.55 லட்சம் கார்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 3.67 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மாருதி, ஹூண்டாய் மற்றும் ஹோண்டா கார்ஸ் நிறுவனங்கள் விற்பனை சரிவை சந்தித்துள்ளன. பிப்ரவரி மாத விற்பனையில் இரண்டாம் இடம் பிடித்த மஹிந்திரா, மார்ச் மாத விற்பனையில் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. டாடா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. அதிகபட்சமாக, கியா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள், 19.28 மற்றும் 18.25 சதவீத விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளன.

Advertisement