இரவிகுளம் பூங்கா 50 ஆண்டுகள் நிறைவு

கேரள மாநிலம் மூணாறு அருகிலுள்ள இரவிகுளம் தேசிய பூங்கா வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த பூங்கா 97 சதுர கி.மீ., சுற்றளவு கொண்டது.
புல்மேடுகளால் சூழப்பட்டு அமைதி பள்ளத்தாக்காக திகழ்ந்த இரவிகுளத்தை ஆரம்ப காலத்தில் தேயிலை தோட்டங்களை நிர்வகித்த ஆங்கிலேயர்கள் வனவிலங்குகளை வேட்டையாடும் பொழுது போக்கு பகுதியாக பயன்படுத்தினர். அப்பகுதியை கையகப்படுத்திய கேரள அரசு நிலம் இல்லாத விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்தது. அப்பகுதியில் மட்டும் காணப்படும் வரையாடு, அரியவகை உயிரினங்கள், தாவரங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேயிலை தோட்டங்களை நிர்வாகித்த அதிகாரிகள் சிலர், இரவிகுளத்தை பாதுகாக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
அதன்படி இரவிகுளம் 1975 மார்ச் 31ல் வனவிலங்கு சரணாலயமாகவும், 1978ல் மாநிலத்தில் முதல் தேசிய பூங்காவாகவும் அறிவிக்கப்பட்டது. நாட்டில் அழிந்து வரும் பட்டியலில் இடம் பெற்றுள்ள வரையாடு எனும் அபூர்வ இன ஆடுகள் இங்கு ஏராளம் உள்ளன. கடந்தாண்டு ஏப்ரலில் வனத்துறை நடத்திய கணக்கெடுப்பில் 827 வரையாடுகள் இருப்பது தெரிந்தது.
மேலும்
-
மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு
-
நீலகிரியில் முழு கடையடைப்பு போராட்டம்; 'அம்மா' உணவகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு உணவு
-
சிறுமி பாலியல் பலாத்காரம்; இளைஞருக்கு 20 ஆண்டு சிறை
-
டூ-வீலரில் அமர்ந்திருந்த சிறுவன் தீப்பற்றி பலி
-
கூடலுார் அருகே பெண் கொலை; போலீஸ் விசாரணை
-
கார் கண்ணாடி உடைத்து தாக்கிய ஐந்து பேர் கைது