தங்கச்சங்கிலி திருட்டு: விமான பணிப்பெண் மீது பெண் பயணி புகார்

பெங்களூரு: தனது குழந்தையின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை, விமான பணிப்பெண் திருடிவிட்டதாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
பிரியங்கா முகர்ஜி என்ற பெண், சில நாட்களுக்கு முன்னர் இண்டிகோ விமானத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருவுக்கு இரண்டு குழந்தைகளுடன் பயணித்து உள்ளார்.
இவர் பெங்களூரு போலீசில், தனது குழந்தையை கழிவறைக்கு அதிதி அஸ்வினி சர்மா என்ற பணிப்பெண் அழைத்துச் சென்றார். திரும்பிவந்த போது, கழுத்தில் இருந்த ரூ.80 ஆயிரம் மதிப்பு உள்ள 20 கிராம் தங்கச்சங்கிலியை அதிதி அஸ்வினி சர்மா திருடிவிட்டதாக தெரிவித்து உள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விமான பணிப்பெண் மீது பெண் பயணி ஒருவர் அளித்த புகார் தொடர்பாக அறிந்துள்ளோம். இந்த விஷயத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வதுடன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.




மேலும்
-
ராமர் பாலத்தை தரிசிக்கும் ஆசி கிடைத்தது: பிரதமர் மோடி
-
ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி; சிறப்புகள் ஏராளம்!
-
தமிழகத்தை வீழ்த்த முடியாது: முதல்வர் ஸ்டாலின்
-
தமிழக மீனவர்கள் 14 பேரை விடுவித்தது இலங்கை
-
சைபர் மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப் பயனர்களுக்கு குறி: உஷாராக இருக்க சைபர் க்ரைம் போலீஸ் அறிவுறுத்தல்
-
கேரளாவில் பேசும் பொருளான எருமை மாடு; காரணம் என்ன?