வக்ப் மசோதா விவாதத்தின்போது துாங்கிய ராகுல்: பா.ஜ., தலைவர் குற்றச்சாட்டு

புதுடில்லி: லோக்சபாவில் வக்ப் மசோதா குறித்து விவாதம் நடந்த நேரத்தில் எதிர்கட்சி தலைவர் ராகுல் துாங்கிக் கொண்டிருந்தார் என்று காங்கிரசை பா.ஜ., தலைவர் ஷாநவாஸ் உசேன் குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் உள்ள வாக்ப் சொத்துகளை மேலாண்மை செய்வதற்காக, சீர்திருத்தங்களை கொண்ட வக்ப் திருத்த மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது.
வக்ப் போர்டு சொத்துகளை தவறாக பயன்படுத்தியதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.இதை தடுக்கவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. வக்ப் திருத்த மசோதா -2025 தொடர்பான காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை பா.ஜ. தலைவர் ஷாநவாஸ் கடுமையாக விமர்சித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
காங்கிரசில் யாரும் தீவிரமாக இல்லை. வக்ப் விவாதத்தின் போது ராகுல் லோக்சபாவில் தூங்கிக் கொண்டிருந்தார், பிரியங்கா பார்லி.க்கு வரவில்லை. பிரியங்கா ஓட்டளிக்க வராதபோது, காங்கிரஸ் கட்சி எவ்வளவு தீவிரமானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
வக்ப் திருத்த மசோதா குறித்து எதிர்கட்சி தலைவர் ராகுல் உள்பட காங்கிரஸ் தலைவர் யாரும் இந்த விசயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காங்கிரஸ், முஸ்லிம் சமூகத்தின் நலன்களை கவனிக்கவில்லை,
அவர்கள் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு முஸ்லிம் சமூகத்தின் பிரச்னைகளை புறக்கணித்தனர்.
இந்த வாக்கு வங்கி அரசியல் இத்துடன் நின்றுவிடும்.
பிரதமர் நரேந்திர மோடியின் அணுகுமுறையும் தொலைநோக்குப் பார்வையும் அனைத்து சமூகங்களுக்கும் பயன் தரும்.
எல்லாருக்கும் எல்லாமே என்ற பாதையில் பிரதமர் மோடி செயல்படுகிறார். மோடி அரசாங்கம் முஸ்லிம்கள் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளின் நலனுக்கும் உறுதிபூண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கூறுகையில்,
காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கனவு காண்கிறார்கள், மேலும் மாநிலத்தின் குடிமக்கள் இப்போது முதல்வர் நிதிஷ் குமாரின் தலைமையின் கீழ் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறார்கள் என்றார்.







மேலும்
-
ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்
-
ராமர் பாலத்தை தரிசித்து ஆசி பெற்றேன்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி
-
ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி; சிறப்புகள் ஏராளம்!
-
தமிழகத்தை வீழ்த்த முடியாது: முதல்வர் ஸ்டாலின்
-
தமிழக மீனவர்கள் 14 பேரை விடுவித்தது இலங்கை
-
சைபர் மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப் பயனர்களுக்கு குறி: உஷாராக இருக்க சைபர் க்ரைம் போலீஸ் அறிவுறுத்தல்