பிரீமியர் லீக் கிரிக்கெட்: 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி

சண்டிகர்: பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

சண்டிகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடினர். 10.2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 89ஆக இருந்த போது, சாம்சன் (38) ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து (67) அவுட்டானார். பின்னர், வந்த வீரர்களும் ஓரளவுக்கு ரன்களை குவித்தனர். ரியான் பராக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார்.

இதனால், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. பெர்குசன் 2 விக்கெட்டுக்களும், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜேன்சன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

206 ரன்களை வெற்றி இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணியில் பிரியன்ஷ் ஆர்யா ரன் எதுவும் எடுக்காமலும், பிரமாஸிம்ரன்சிங் 17 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐய்யர் 10 ரன்களிலும், மார்கஸ்ஸ்டோனிஷ் 1 ரன்னிலும் , நெஹால் வத்ஹிரா 62 ரன்களிலும், மேக்ஸ்வெல் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.ராஜஸ்தான் அணியில் சந்தீப் சர்மா, மகேஷ் தீக்சானா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழத்தினர்.

Advertisement