ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6 ஆக பதிவு

டோக்கியோ: ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 6 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் உலகின் நிலநடுக்கங்களை அதிகம் சந்திக்கும் நாடுகளில் ஒன்று.
ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் மெகா நிலநடுக்கம் ஏற்பட 80 சதவீதம் வாய்ப்புள்ளது. மெகா நிலநடுக்கத்தால் 3 லட்சம் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அந்நாட்டு அரசு கூறியிருந்தது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 02) ஜப்பானின் கியூஷுவில் 7.34 மணிக்கு,
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 6 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை ஏதும் இதுவரை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (1)
Petchi Muthu - TIRUNELVELI,இந்தியா
02 ஏப்,2025 - 22:41 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பீஹார், மேற்குவங்கம், தமிழகத்திற்கு அமித் ஷா பயணம்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி பேட்டிங்
-
வளர்ச்சியை நம்புகிறோம்: எல்லை விரிவாக்கத்தை அல்ல: பிரதமர் மோடி
-
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்
-
வக்பு மசோதாவுக்கு நடிகர் விஜய் எதிர்ப்பு
-
நாட்டின் நலனுக்காகவே வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா: ராஜ்யசபாவில் நட்டா பேச்சு
Advertisement
Advertisement