தொடரை வென்றது நியூசிலாந்து: பாகிஸ்தான் மீண்டும் தோல்வி

ஹாமில்டன்: இரண்டாவது ஒருநாள் போட்டியில் 84 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. பாகிஸ்தான் மீண்டும் தோல்வியடைந்தது.
நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. ஹாமில்டனில் 2வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணிக்கு நிக் கெல்லி (31), ஹென்றி நிக்கோல்ஸ் (22) ஆறுதல் தந்தனர். டேரில் மிட்செல் (18), கேப்டன் மிட்செல் பிரேஸ்வெல் (17) நிலைக்கவில்லை. முகமது அபாஸ் (41), மிட்செல் ஹே (99*) கைகொடுத்தனர். நியூசிலாந்து அணி 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 292 ரன் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷபிக் (1), இமாம்-உல்-ஹக் (3), பாபர் ஆசம் (1), கேப்டன் முகமது ரிஸ்வான் (5), சல்மான் ஆகா (9) ஏமாற்றினர். பஹீம் அஷ்ரப் (73), நசீம் ஷா (51) அரைசதம் கடந்தனர். பாகிஸ்தான் அணி 41.2 ஓவரில், 208 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. நியூசிலாந்து சார்பில் பென் சியர்ஸ் 5, ஜேக்கப் டபி 3 விக்கெட் சாய்த்தனர்.
ஒருநாள் போட்டியில் 99 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்த 2வது நியூசிலாந்து வீரரானார் மிட்செல் ஹே. இதற்கு முன், புரூஸ் எட்கர் (99* ரன், எதிர்: இந்தியா, 1981, ஆக்லாந்து) இருந்தார்.
மேலும்
-
25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்க தீர்ப்பை ஏற்க மாட்டேன்; ஆனால் அதனை செயல்படுத்துவோம்: சொல்கிறார் மம்தா
-
பீஹார், மேற்குவங்கம், தமிழகத்திற்கு அமித் ஷா பயணம்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி பேட்டிங்
-
வளர்ச்சியை நம்புகிறோம்: எல்லை விரிவாக்கத்தை அல்ல: பிரதமர் மோடி
-
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்
-
வக்பு மசோதாவுக்கு நடிகர் விஜய் எதிர்ப்பு