இந்தியா-தென் ஆப்ரிக்கா மோதல்: அட்டவணை வெளியீடு

புதுடில்லி: இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்காவுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
சொந்த மண்ணில் இந்திய அணி பங்கேற்கும் தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வெளியிட்டது. இதன்படி வரும் அக்டோபரில் இந்தியா வரவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட், ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் அக். 6ல் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் கோல்கட்டா, ஈடன் கார்டனில் (அக். 14-18) நடக்கவுள்ளது.


அதன்பின் இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட் டில்லியில், நவ. 18ல் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் அசாமின் கவுகாத்தியில் நவ. 26ல் ஆரம்பமாகிறது. இது, கவுகாத்தியில் நடத்தப்படும் முதல் டெஸ்ட் போட்டியாகும்.
மூன்று ஒருநாள் போட்டிகள் ராஞ்சி (நவ. 30), ராய்பூர் (டிச. 3), விசாகப்பட்டனத்தில் (டிச. 6) நடக்கவுள்ளன. ஐந்து 'டி-20' போட்டிகள் கட்டாக் (டிச. 9), சண்டிகர் (டிச. 11), தர்மசாலா (டிச. 14), லக்னோ (டிச. 17), ஆமதாபாத்தில் (டிச. 19) நடக்கவுள்ளன.

Advertisement