சட்டசபையில் இன்று...

தமிழக சட்டசபையில், கேள்வி நேரம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறை, கால்நடை, மீன்வளம், பால்வளத் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நேற்று நடந்தது; பதிலுரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனால், அந்த துறை அமைச்சர்களான பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன் ஆகியோர், தங்கள் துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட உள்ளனர்.

அதன்பின், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது. அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

Advertisement