வாஜ்பாயி காலம் முதல் கச்சத்தீவு மீட்புக்கு ஆதரவு

1

கச்சதீவு தீர்மானத்தில், இரண்டு விஷயங்களை அடிப்படையாக பார்க்க வேண்டும். ஒன்று மீனவர் நலன்; மற்றொன்று இழந்த கச்சத்தீவை மீட்பது. மீனவர்கள் நலன் குறித்து, பலரும் கவலைகளை பதிவு செய்துள்ளனர். பா.ஜ., நடத்திய கடல் தாமரை போராட்டம் குறித்தும் பேசினர்.

மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றியவர் பிரதமர் மோடி. ஆழ்கடல் மீன்பிடிப்பதற்கு பயிற்சி, படகுகள் வாங்க, கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக கடனுதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. மீனவர்கள் என்று வருகிறபோது, அவர்கள் குஜராத்தைச் சேர்ந்தவரா, தமிழகத்தைச் சேர்ந்தவரா என்ற வேறுபாட்டை, ஒருபோதும் மத்திய அரசும், பிரதமரும் பார்ப்பதில்லை.

குடிமக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் பா.ஜ., அரசு முனைப்பு காட்டுகிறது. கச்சத்தீவை தாரை வார்த்தது முதல் இது தொடர்பாக பா.ஜ., தலைவர்கள் பேசி வருகின்றனர். கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. தன்னிச்சையாக முடிவு செய்து, கச்சத்தீவை தாரை வார்த்தவரலாற்று தவறை, பிரதமர் மோடியால் மட்டுமே சரி செய்ய முடியும்.

அதேநேரத்தில், மத்தியில் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் விட்டுவிட்டு, ஆட்சியில் இல்லாதபோது, நீங்கள் இப்பிரச்னையை கையில் எடுப்பது ஏன் என்ற எண்ணம் எங்களுக்கு வராமல் இல்லை. தமிழகத்தின் உரிமைக்காகவும், நலனுக்காகவும் பா.ஜ., துணை நிற்கிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. வாஜ்பாயி காலத்தில் இருந்தே கச்சத்தீவுக்கு குரல் கொடுக்கிறோம். எனவே, அந்த வழியில் தீர்மானத்தை பா.ஜ., ஆதரிக்கிறது.

- வானதி

பா.ஜ., - எம்.எல்.ஏ.,

Advertisement