ஒரு சதவீத கட்டண சலுகைக்கு 10 கட்டுப்பாடுகள் விதிப்பு

சென்னை:மகளிர் பெயரில் பதிவாகும் பத்திரங்களுக்கு, ஒரு சதவீத கட்டண சலுகை பெற, 10 வகையான கட்டுப்பாடுகளை, பதிவுத்துறை விதித்துள்ளது.
தமிழகத்தில், மகளிர் பெயரில் சொத்துக்கள் வாங்குவதை ஊக்குவிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், 10 லட்சம் ரூபாய் மதிப்பு வரை, மகளிர் பெயரில் பதிவு செய்யப்படும், சொத்து பத்திரங்களுக்கு, பதிவுக் கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சலுகை, நேற்றுமுன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இச்சலுகைகளைப் பெற, 10 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, பதிவுத்துறை சார் - பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மகளிர் பெயரில் பதிவு செய்யப்படும், சொத்து விற்பனை பத்திரங்களுக்கு மட்டுமே, இந்த சலுகை பொருந்தும். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள், கூட்டாக சொத்து வாங்கும்போது, அனைவரும் பெண்களாக இருந்தால் மட்டுமே பொருந்தும்
ஒரு சொத்தை, ஒரே குடும்பத்தை சேர்ந்த அல்லது சேராத, ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் கூட்டாக வாங்கினாலும் பொருந்தும்
ஒரு சொத்தை, கணவன், மனைவி கூட்டாக வாங்கினால், இந்த சலுகை பொருந்தாது
குடும்ப உறுப்பினர் அல்லாத ஆண்கள், பெண்களுடன் சேர்ந்து வாங்கும், சொத்து பத்திரத்துக்கும் இது பொருந்தாது
இந்த சலுகை அமலுக்கு வந்த தேதிக்கு முன்பு, பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களுக்கு, இது பொருந்தாது
பதிவுக்காக பத்திரம் தாக்கல் செய்யப்படும் தேதியில், வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், சொத்தின் மதிப்பு, 10 லட்சம் ரூபாய்க்கு கீழ் இருக்க வேண்டும்
இந்த சலுகையை பெற, அதிக மதிப்புள்ள சொத்துக்களை, ஒன்றுக்கு மேற்பட்ட பாகங்களாக பிரித்து, மகளிர் பெயரில் பதிவு செய்தாலும், இச்சலுகை வழங்கப்படாது
தாக்கல் செய்யப்படும் பத்திரத்தில், நிலத்தின் மதிப்பு மட்டும், 10 லட்சம் ரூபாய் எனக் காட்டி, அதில் கட்டட மதிப்பு அதிகமாக இருந்தால், இச்சலுகை பொருந்தாது
அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில், ஒரு பெண் பெயரில், எத்தனை வீடுகள் தனித்தனியே வாங்கினாலும், ஒவ்வொன்றின் மதிப்பும், 10 லட்சம் ரூபாய்க்குள் வரும் நிலையில், இந்த சலுகை பொருந்தும்
ஒரு மனைப்பிரிவில், 10 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள, ஒவ்வொரு மனையையும், தனித்தனியே ஒரே பெண் பெயரில் வாங்கினாலும், இந்த சலுகை பொருந்தும்
இதன் அடிப்படையில், இச்சலுகை உரிய முறையில் அமல்படுத்தப்பட வேண்டும். இதை நிர்வாக பணிக்கான மாவட்ட பதிவாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று சிலருக்கு நப்பாசை; மார்க்சிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்க தீர்ப்பை ஏற்க மாட்டேன்; ஆனால் அதனை செயல்படுத்துவோம்: சொல்கிறார் மம்தா
-
பீஹார், மேற்குவங்கம், தமிழகத்திற்கு அமித் ஷா பயணம்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி - 104 / 3
-
வளர்ச்சியை நம்புகிறோம்: எல்லை விரிவாக்கத்தை அல்ல: பிரதமர் மோடி
-
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்