கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனிஉத்திர விழா தொடக்கம்


கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனிஉத்திர விழா தொடக்கம்


கரூர்:கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா இன்று, கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், இன்று காலை, 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்குகிறது. அதைதொடர்ந்து, பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடக்கிறது.
வரும், 8ல் சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு அபி ேஷகம் நடக்கிறது. 9ல் திருக்கல்யாண உற்சவம், 11ல் தேரோட்டம், 12 ல் தீர்த்தவாரி, 13ல் ஆளும் பல்லாக்கு, 14ல் ஊஞ்சல் உற்சவம், 15ல் வெள்ளி வாகனத்தில் உற்சவர் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள்
நடக்கின்றன.

Advertisement