எஸ்.டி.பி.ஐ., ஆர்ப்பாட்டம்



எஸ்.டி.பி.ஐ., ஆர்ப்பாட்டம்

கரூர்:கரூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ., அமைப்பு சார்பில், மாவட்ட தலைவர் பாஷா தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், வக்ப் திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். பள்ளிவாசல், கபர்ஸ்தான் ஆகியவற்றை விட்டு தர மாட்டோம் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாநில செயலாளர் பாதர் மார்க், மாவட்ட துணைத்தலைவர் ேஷக் பரீத், பொதுச்செயலாளர் இஸ்மாயில், அமைப்பு செயலாளர் சாதிக் அலி, செயலாளர் அஜீஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement