மோசமான நிலையில்வாய்க்கால் படித்துறை


மோசமான நிலையில்வாய்க்கால் படித்துறை


கிருஷ்ணராயபுரம்:சிந்தலவாடி பகுதியில் உள்ள படித்துறை படிகள் சிதிலமடைந்துள்ளன.கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் கட்டளை தென்கரை வாய்க்கால், சிந்தலவாடி வழியாக செல்கிறது. வாய்க்காலில் மக்கள் குளிக்கும் வகையில் படித்துறை படிகள் கட்டப்பட்டுள்ளன. வாய்க்காலில் தண்ணீர் செல்லும் போது, படித்துறை படிகள் வழியாக மக்கள் குளிக்கின்றனர்.
தற்போது படித்துறை படிகள் சிதிலமடைந்து மோசமாக இருக்கிறது. இதனால், தண்ணீர் செல்லும் போது மக்கள் குளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, வாய்க்கால் படித்துறை படிகளை சரி செய்ய பஞ்சாயத்து நிர்வாகம் முன்வர வேண்டும்.

Advertisement