சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்போக்சோவில் ஐந்து பேர் கைது


சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்போக்சோவில் ஐந்து பேர் கைது


குளித்தலை: குளித்தலையில், 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட, ஐந்து வாலிபர்களை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
குளித்தலையை சேர்ந்த, 17 வயது சிறுமி தனது தாய் இறந்த பின், பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இந்த சிறுமியிடம் குளித்தலையை சேர்ந்த பாலச்சந்தர், 20, பாலகிருஷ்ணன், 22, சதீஷ், 21, ரங்கநாதன், 22, கரண், 24, ஆகியோர் மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகார்படி, குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து ஐந்து பேரையும் கைது செய்தனர். அனைவரும், கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்
பட்டனர்.

Advertisement