ஆரம்ப சுகாதார நிலையத்துக்குஆம்புலன்ஸ் செல்வதில் சிரமம்
ஆரம்ப சுகாதார நிலையத்துக்குஆம்புலன்ஸ் செல்வதில் சிரமம்
அரவக்குறிச்சி:மலைக்கோவிலுார், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் சாலையை, மேம்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரவக்குறிச்சி அருகே, நாகம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மலைக்கோவிலுாரில், மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் உள்ளது. நாள்தோறும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு சிகிச்சைகளுக்காக, மலைக்கோவிலுார் சுகாதார நிலையம் வருகின்றனர். மேலும், கரூர் - -மதுரை தேசிய நெடுஞ்சாலையையொட்டி, மலைக்கோவிலுார் சுகாதார நிலையம் உள்ளது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்தில், சிறுசிறு காயங்கள்
ஏற்படுவோர், மலைக்கோவிலுார் சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக வருகின்றனர்.ஆனால், குடியிருப்பு பகுதிகளை தாண்டி, சுகாதார நிலையம் செல்ல வேண்டிய நிலை உள்ளதால், குறுகிய சாலைகளில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக செல்ல முடியவில்லை. இதனால், மதுரை தேசிய நெடுஞ்சாலை, அணுகு சாலை பகுதியில் இருந்து, மலைக்கோவிலுார் சுகாதார நிலையம் வரை, தரமான முறையில் தார்ச்சாலை அமைத்து, சாலையை விரிவுப்படுத்த வேண்டியது
அவசியம்.
மேலும்
-
கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று சிலருக்கு நப்பாசை; மார்க்சிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்க தீர்ப்பை ஏற்க மாட்டேன்; ஆனால் அதனை செயல்படுத்துவோம்: சொல்கிறார் மம்தா
-
பீஹார், மேற்குவங்கம், தமிழகத்திற்கு அமித் ஷா பயணம்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி - 104 / 3
-
வளர்ச்சியை நம்புகிறோம்: எல்லை விரிவாக்கத்தை அல்ல: பிரதமர் மோடி
-
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்