சிங்கப்பூர் வேலைக்கு ஆசைப்பட்டு 22 லட்சம் ரூபாய் இழந்த வாலிபர்
கோவை:வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி, ஆன்லைனில் நேர்காணல் நடத்தி ரூ. 22 லட்சம் மோசடி செய்த நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை, இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 40; தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். சிவக்குமார் அந்த பணியில் இருந்து விலகி, வேறு வேலை தேடி வந்தார். அதற்காக, ஆன்லைனில் பல்வேறு தளங்களில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், சிவக்குமாரின் மொபைல் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் வேலைவாய்ப்பு குறித்த தகவல் இருந்தது. அவர் அதில் இருந்த எண்ணில் பேசினார்.
எதிர் முனையில் பேசிய நபர், தன்னை பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலை பெற்று தரும் எச்.ஆர்., நிறுவன அதிகாரி என கூறிக்கொண்டார். சிங்கப்பூரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில், மேலாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்குமாறு தெரிவித்தார்.
சிவக்குமார் விண்ணப்பித்தார். பின்னர், சிவக்குமாருக்கு ஆன்லைனில் நேர்காணல் நடத்தினார். நேர்காணல் முடிவில், சிவக்குமார் வேலை தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சிங்கப்பூர் செல்ல விசா, பயண செலவு, ஆவண செலவு என கூறி, ரூ. 22 லட்சம் பல்வேறு தவணைகளில் பெற்றார். பணம் செலுத்தி பல மாதங்கள் ஆகியும், சிவக்குமாருக்கு வேலைக்கான ஆணை வரவில்லை.
சந்தேகம் அடைந்த சிவக்குமார், மர்ம நபர்களை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று சிலருக்கு நப்பாசை; மார்க்சிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்க தீர்ப்பை ஏற்க மாட்டேன்; ஆனால் அதனை செயல்படுத்துவோம்: சொல்கிறார் மம்தா
-
பீஹார், மேற்குவங்கம், தமிழகத்திற்கு அமித் ஷா பயணம்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி - 104 / 3
-
வளர்ச்சியை நம்புகிறோம்: எல்லை விரிவாக்கத்தை அல்ல: பிரதமர் மோடி
-
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்