தமிழக தீயணைப்பு துறை சார்பில்புதிய வீரர்களுக்கு பயிற்சி தொடக்கம்


தமிழக தீயணைப்பு துறை சார்பில்புதிய வீரர்களுக்கு பயிற்சி தொடக்கம்

கரூர்:தமிழக தீயணைப்பு துறை சார்பில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு, அடிப்படை பயிற்சி முகாம், கரூர் அருகே வேட்டமங்கலத்தில் தனியார் கல்லுாரியில் நேற்று
தொடங்கியது.தமிழக தீயணைப்பு துறைக்கு சமீபத்தில் புதிதாக, 650 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதும், மண்டலம் வாரியாக ஆறு மையங்களில் நேற்று, புதிய தீயணைப்பு வீரர்களுக்கு அடிப்படை பயிற்சி முகாம் தொடங்கியது.
திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட, தீயணைப்பு வீரர்களுக்கு கரூர் அருகே வேட்டமங்கலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பயிற்சி முகாம் தொடங்கியது. முகாமை, மத்திய மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் குமார் தொடங்கி
வைத்தார்.முகாமில், தீயணைப்பு கருவிகள் குறித்த பயன்பாடு, நீச்சல் பயிற்சி, மூச்சு பயிற்சி, ஆபத்து காலங்களில் பொதுமக்களை காப்பாற்ற பயிற்சி உள்பட, 90 நாட்களுக்கு புதிய வீரர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கப்படுகிறது. அதன் பிறகு, புதிய வீரர்கள் தீயணைப்பு நிலையங்களில் பணிக்கு அமர்த்தப்பட
உள்ளனர்.

Advertisement