ரூ.17 கோடிக்கு நாட்டு சர்க்கரைபழனி தேவஸ்தானம் கொள்முதல்
ரூ.17 கோடிக்கு நாட்டு சர்க்கரைபழனி தேவஸ்தானம் கொள்முதல்
கோபி:ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை, நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லத்துக்கான ஏலம் நடக்கிறது. கோபி, பவானி தாலுகாவை சேர்ந்த கரும்பு விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த நாட்டு சர்க்கரையை, ஏலத்துக்கு கொண்டு வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 2020 அக்.,15 முதல், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், முதல் தரம் (திடம்) மற்றும் இரண்டாம் தரம் (மீடியம்) என நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தை, பழனி தேவஸ்தான நிர்வாகம் கொள்முதல் செய்கின்றனர்.
கடந்த, 2024 ஏப்.,1 முதல், நடப்பாண்டின் மார்ச்., 31 வரை கடந்த ஓராண்டில், 1,540 விவசாயிகளிடம் இருந்து, 17.01 கோடி ரூபாய் மதிப்பில், 63 ஆயிரத்து, 952 மூட்டைகளில் (60 கிலோ), மொத்தம், 38 ஆயிரத்து, 371 குவிண்டால் எடையில், நாட்டு சர்க்கரையை பழனி தேவஸ்தான நிர்வாகம் கொள்முதல் செய்துள்ளனர். உருண்டை வெல்லம் கொள்முதலில், 26.23 லட்சம் ரூபாய் மதிப்பில், 43 விவசாயிகளிடம் இருந்து, 1,635 சிப்பத்தில் (30 கிலோ), 490 குவிண்டால் கொள்முதல் செய்துள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும், 17.27 கோடி ரூபாய் மதிப்பில், 38 ஆயிரத்து, 861 குவிண்டால் கொள்முதல் செய்துள்ளதாக, அதன் அதிகாரிகள்
தெரிவித்தனர்.
மேலும்
-
கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று சிலருக்கு நப்பாசை; மார்க்சிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்க தீர்ப்பை ஏற்க மாட்டேன்; ஆனால் அதனை செயல்படுத்துவோம்: சொல்கிறார் மம்தா
-
பீஹார், மேற்குவங்கம், தமிழகத்திற்கு அமித் ஷா பயணம்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி - 104 / 3
-
வளர்ச்சியை நம்புகிறோம்: எல்லை விரிவாக்கத்தை அல்ல: பிரதமர் மோடி
-
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்