சிறுமியை கடத்தி சென்றநேபாள வாலிபர் கைது

சிறுமியை கடத்தி சென்றநேபாள வாலிபர் கைது


ஈரோடு:சிறுமியை, ஹிமாச்சல் பிரதேசம் கடத்தி சென்ற வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் உள்ள, நுால் மில்லில் அசாமை சேர்ந்த தம்பதியினர் வேலை செய்து வந்தனர். அவர்களது, 15 வயது மகளும் அவ்வப்போது மில்லுக்கு பெற்றோருடன் வருவார். நேபாள நாட்டை சேர்ந்த பிலால் மகன் உபேந்தர், 22, என்ற வாலிபரும் அந்த நுால் மில்லில் வேலை செய்தார்.
இந்நிலையில், சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை காட்டி ஹிமாச்சல் பிரதேசத்துக்கு உபேந்தர் அழைத்து சென்றார். சிறுமி மாயமானது குறித்து, கருங்கல்பாளையம் போலீசில், 25 நாட்களுக்கு முன் பெற்றோர் புகார்
அளித்தனர்.இதற்கிடையில், இரு தினங்களுக்கு முன் இருவரும் ஹிமாச்சல் பிரதேசத்தில் இருப்பது தெரியவந்தது. கருங்கல்பாளையம் போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். உபேந்தர் மீது போக்சோ, கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Advertisement