ரூ.3 கோடிக்கு கொப்பரை ஏலம்



ரூ.3 கோடிக்கு கொப்பரை ஏலம்


பெருந்துறை:பெருந்துறை கூட்டுறவு வேளாண் சங்கத்தில், விவசாயிகள், 4,241 மூட்டைகளில், ஒரு லட்சத்து, 80 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், முதல் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, 153. 99 ரூபாய், அதிகபட்சமாக, 187.18 ரூபாய்க்கு விற்பனையாயின. இரண்டாம் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக, 31.99 ரூபாய்ம், அதிகபட்சமாக, 182.49 ரூபாய்க்கு விற்பனையாயின. மொத்தம் மூன்று கோடியே, 10 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.


'தி.மு.க., ஆட்சியின் அவலங்களை தெரிவியுங்கள்'அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டத்தில் வலியுறுத்தல்

ஈரோடு:'தி.மு.க., ஆட்சியின் அவலங்களை மக்களிடம் தெரிவித்து, அ.தி.மு.க., ஆட்சி அமைய பணி செய்ய வேண்டும்,'' என, பூத் கமிட்டி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஈரோடு மாநகர் மாவட்ட, அ.தி.மு.க., சூளை பகுதி சார்பில், பூத் கமிட்டி பணிகள் குறித்த ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. பகுதி செயலர் எம்.ஜி.பழனிசாமி வரவேற்றார். மாவட்ட செயலர் ராமலிங்கம் தலைமை வகித்து பேசுகையில், ''பூத் கமிட்டியினர், அந்தந்த பகுதி வாக்காளர்கள், பொதுமக்களை சந்தித்து கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் சிறந்த திட்டங்கள், அதன் பயன்களை தெரிவியுங்கள். தற்போதைய தி.மு.க., ஆட்சியின் அவலங்கள், குறைகள், மக்களின் தேவைகளை செயல்படுத்தவில்லை என்பதை விளக்குங்கள். தி.மு.க., ஆட்சி மீது, மக்கள் ஏற்கனவே வெறுப்பில்
உள்ளதால், இந்த ஆட்சியின் செயலற்ற தன்மையை அவர்களிடம் எடுத்து கூறி, மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைய பணி செய்ய வேண்டும்'' என்றார்.
பூத் கமிட்டி பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆனந்தன் பேசியதாவது:பூத் கமிட்டிதான் ஒரு கட்சி மற்றும் ஒரு தேர்தலின் அடித்தளம். அதனை சரியாக கட்டமைத்தால், தேர்தலில் சிறந்த வெற்றி பெற முடியும். பொதுச்செயலர் இ.பி.எஸ்., அறிவித்தபடி, ஒவ்வொரு பூத்துக்கும் உரிய எண்ணிக்கையில் நிர்வாகிகளை இணைத்து, கமிட்டி அமைக்க வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் அவர்கள் சென்று, அதிக எண்ணிக்கையில் இளைஞர்களை சேர்க்க வேண்டும். அப்பகுதியில் உள்ள வாக்காளர்களை உறுதி செய்வதுடன், அந்த வாக்காளர் உள்ளூரில், வெளியூரில் எங்கு உள்ளார் என, அவரது விபரங்களை பதிவு செய்து, அவரிடம் பேசி வர வேண்டும். தேர்தலின்போது, நமது அணுகுமுறைக்கே ஓட்டு பதிவாகும்படி செயல்பட வேண்டும். இவ்வாறு பேசினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு, பகுதி செயலர் கே.சி.பழனிசாமி, கேசவமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement