பவானி அருகே விபத்துவாலிபர் பரிதாப பலி


பவானி அருகே விபத்துவாலிபர் பரிதாப பலி

பவானி:ஈரோட்டை சேர்ந்தவர் கருப்புச்சாமி, 28: இவர் நேற்று இரவு, 8:30 மணியளவில், டிஸ்கவர் பைக்கில், பவானி வழியாக ஆப்பக்கூடல் செல்வதற்காக, சேர்வராயன்பாளையம் வழியாக நெடுஞ்சாலை ரவுண்டானாவை கடக்கும் போது, சாலையின் நடுவில் இருந்த தடுப்பு மீது மோதி, படுகாயமடைந்தார்.
பவானி போலீசார், அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
மேலும் கருப்புசாமி, ெஹல்மெட் போடாமல், மது அருந்தியபடியும், வேகமாக வந்ததால், விபத்து ஏற்பட்டு இறந்ததாக போலீசார்
தெரிவித்தனர்.

Advertisement