தண்டலம் - அரக்கோணம் சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

மண்ணுார்:தண்டலம் -- அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்துக்குட்பட்ட மண்ணுார் ஊராட்சி. இப்பகுதியில் நெமிலி பகுதிக்கு செல்லும் சாலையோர சந்திப்பு பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.

குடிநீர் வீணாவது குறித்து, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், சில தினங்களாக குடிநீர் வீணாகி வருவது பகுதிவாசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் மண்ணுார் பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவதை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement