சேலம் ரவுடி ஜான் கொலைமேலும் ஒரு வாலிபர் கைது
சேலம் ரவுடி ஜான் கொலைமேலும் ஒரு வாலிபர் கைது
ஈரோடு:ரவுடி ஜான் கொலை வழக்கில், சேலத்தை சேர்ந்த மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சேலம், கிச்சிபாளையம் சுந்தர் தெருவை சேர்ந்தவர் ஜான், 30. கடந்த, 19ல் நசியனுார் அருகே காரில் மனைவியுடன் சென்ற போது, அவரை பின் தொடர்ந்து மற்றொரு காரில் வந்தவர்கள், ஜான் காரில் மோதினர். பின்னர் ஜானை காரில் வைத்தே கொலை செய்தனர். இது தொடர்பாக, சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
இந்நிலையில், கிச்சிபாளையம் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த குமரேசன் மகன் விக்கி (எ) விக்னேஸ்வரன், 30, என்பவரை சித்தோடு போலீசார் கொலை வழக்கு தொடர்பாக கடந்த, 30ல் கைது செய்தனர். நீதிமன்றத்தில் சரணடைந்த நால்வரையும், கஸ்டடி எடுத்து விசாரிக்கப்படுவர் என, சித்தோடு போலீசார் தெரிவித்தனர்.
மேலும்
-
கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று சிலருக்கு நப்பாசை; மார்க்சிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்க தீர்ப்பை ஏற்க மாட்டேன்; ஆனால் அதனை செயல்படுத்துவோம்: சொல்கிறார் மம்தா
-
பீஹார், மேற்குவங்கம், தமிழகத்திற்கு அமித் ஷா பயணம்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி - 104 / 3
-
வளர்ச்சியை நம்புகிறோம்: எல்லை விரிவாக்கத்தை அல்ல: பிரதமர் மோடி
-
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்